எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் வீரர் – உலகளவில் அபிநந்தனுக்கு கிடைத்த பெருமை !

உலகின் நவீன ரக போர் விமானமான எஃப்-16 விமானத்தை உலகிலேயே முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை இந்திய விமானி அபிநந்தன் பெற்றுள்ளார். காஷ்மீர் எல்லையில் அத்து மீறி நுழைந்த எஃப்-16 போர் விமானத்தை துரத்தி சென்ற விமானி அபிநந்தன் ஆர்-73 ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தினார்.

mig21jpg

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள ரஜோரி ராணுவ முகாமை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த 3 எஃப்-16 ரக விமானங்கள் எல்லைக்குள் ஊடுருவின.

பாகிஸ்தானின் அந்த விமானங்களை இந்திய விமானப்படை போர் விமானங்கள் வழிமறித்து தாக்கி விரட்டியடித்தன. இதனால் தனது முயற்சியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் விமானப்படை தப்பி ஓடியது. பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்ற இந்திய விமானம் ஒன்று அதனை சுட்டு வீழ்த்தியது. மைக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் என்ற இந்திய விமானி தான் பாகிஸ்தானின் அதிநவீன எஃப்-16 ரக போர் விமானத்தை ராவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினார்.

f

அந்த விமானத்தை சுட்டபோது நடத்தப்பட்ட எதிர் தாக்குதலில் அபிநந்தன் இயக்கிய மைக்21 ரக விமானம் விபத்திற்குள்ளானதில் வேறு வழியின்றி, அவர் பாகிஸ்தான் எல்லையில் பாராசூட் உதவியுடன் தரையிறங்கினார். இதனை தொடர்ந்து அபிநந்தனை போர்க் கைதியாக பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவின் எச்சரிக்கையினாலும், உலக நாடுகளின் அழுத்தத்தினாலும் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையி விடுவிப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் அபிநந்தன் இந்திய வீரர்களிடம் வாகா எல்லையில் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு உரிய சிகிச்சைகளும், மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் போர் விமானத்தை அபிநந்தன் எப்படி எதிர்கொண்டார் ? எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது ? எப்படி பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார் ? அங்கு என்ன நடந்தது? என பல்வேறு தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

abhi

அந்த வகையில் அமெரிக்காவின் நவீன ரக எஃப் -16 ரக போர் விமானத்தை உலகிலேயே முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அபிநந்தன் பெற்றுள்ளார். இதுவரை எஃப்-16 விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தியது கிடையாது. அபிநந்தன் இயக்கிய மைக்21 ரக விமானம், எஃப்-16 விமானத்தை காட்டிலும் குறைவான அம்சங்கள் கொண்டவை. 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷிய தயாரிப்பான மைக்-21 பைஸன் ரக விமானத்தின் மூலம் அதிநவீன எப்-16 ரக விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதுதான் ஆச்சர்யமானது . இதன்மூலம் எஃப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கு அபிநந்தன், வியம்பல் ஆர்-73 எனும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஏவுகணையைப் பயன்படுத்தும் முன் கடைசியாக ”செலக்டட் ஆர்-73” எனும் செய்தியை விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு அபிநந்தன் தகவல் அனுப்பியுள்ளார். தகவல் அனுப்பிய அடுத்த வினாடியே அவர் ஏவுகணையை வீசி பாகிஸ்தான் போர் விமானத்தை அழித்துள்ளார். அமெரிக்கா தயாரிப்பான எப்.16 வகை விமானங்களை சில நிபந்தனைகளுடன் தான் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவிற்கு எதிராக இந்த போர் விமானங்களை பயன்படுத்தக் கூடாது என்பது அமெரிக்க நிபந்தனைகளில் ஒன்று. தற்போது அதனை பாகிஸ்தான் மீறியுள்ளது. இந்தியா மீது எஃப்-16 ரக போர் விமானத்தை ஏவியுள்ளது. இதற்காக பாகிஸ்தான் மீது விசாரணை மேற்கொள்ள அமெரிக்க முடிவெடுத்துள்ளது.

உலக அளவில் எப்-16 வகை போர் விமானத்தை முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற தகவல் வெளியானதும் அபிநந்தனுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-