சர்வதேச அளவில் உயரிய ’ப்ளூ கிராஸ்’ விருது பெற்றார் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா

இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ராவுக்கு உயரிய ப்ளூ கிராஸ் விருது வழங்கப்பட்டது. இந்த மூலம் ப்ளூ கிராஸ் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பிந்த்ரா பெற்றார்.

abi

இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், 2006ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் 7 காமன்வெல்த் போட்டிகளிலும், 3 ஆசியப் போட்டிகளிலும் பங்கேற்ற அபினவ் பிந்த்ரா பதக்கம் வென்று அசத்தினார். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் அரங்கின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருக்கும் அபினவ் பிந்த்ரா சொந்தக்காரரானார்.

Abhinav

இந்நிலையில் துப்பாக்கி சுடுதலில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் ப்ளூ கிராஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவின் அபினவ் பிந்த்ராவிற்கு ப்ளூ கிராஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் மூலம் ப்ளூ கிராஸ் விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அபினவ் பெற்றார்.

இதுமட்டுமின்றி, அபினவ் பிந்த்ராவிற்கு 2000ம் ஆண்டு அர்ஜூனா விருது, 2001ம் ஆண்டு ராஜீவ் கேல்ரத்னா மற்றும் 2009ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.

ப்ளூ கிராஸ் விருது குறித்து அபினவ் பிந்த்ரா கூறுகையில், “ துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் உயரிய கௌரவம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது கிடைக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் “ என கூறினார்.

கார்ட்டூன் கேலரி