சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இந்திய வீரர் அபினவ் பிந்திரா தேர்வு

டில்லி

ந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்திரா சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்திரா பல போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியவர் ஆவார்.   கடந்த 2016ஆம் வருடம் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தனது இரண்டாம் பதக்கத்தை வென்றவர்.   அத்துடன் 2008 ஆம் வருடம் பீஜிங்கில் நடந்த  போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியவர் ஆவார்.

தற்போது போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள 35 வயதாகும் அபினவ் பிந்திரா மற்றும் ஒரு புகழ் அடைந்துள்ளார்.    சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக அபினவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அபினவ் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது இந்தியர் ஆவார்.   இதற்கு முன்பு  பாட்மிண்டன் வீராங்கனை சைனா நெஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி