மலையாளப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்…

 

மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும், கோஷியும்’ என்ற படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு, வசூலும் குவித்தது.

பிரிதிவிராஜும், பிஜு மேனனும் நடித்திருந்தார்கள். சாச்சி இயக்கி இருந்தார்.

போலீஸ் அதிகாரிக்கும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கும் இடையே ஏற்படும் உரசலே இந்த படத்தின் கதை.

தெலுங்கில் இந்த படம் ரீ-மேக் செய்யப்படுவது தெரிந்த விஷயம். பவன் கல்யாணும், ராணாவும் நடிக்கிறார்கள்.

‘அய்யப்பனும், கோஷியும்’ படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜான் ஆபிரஹாமும், அபிஷேக் பச்சனும் நடிக்க உள்ளனர். ஜான் ஆபிரஹாம் தயாரிக்கிறார்.

ஆபிரஹாமும், அபிஷேக்கும் இதற்கு முன்பு ‘தொஸ்தானா’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்போது இணைகிறார்கள்.

சூரியா- கார்த்திக் நடிக்க இந்த படத்தை தமிழில் தயாரிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

– பா. பாரதி