குடும்பத்தில் கொரோனா பரவ அபிஷேக் காரணம்?

--

குடும்பத்தில் கொரோனா பரவ அபிஷேக் காரணம்?

அமிதாப்பச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள்: ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா என இந்தி சூப்பர்ஸ்டார், குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்தி திரை உலகை அதிர வைத்துள்ளது.

அமிதாப்பச்சன், கொரோனாவின் வீரியம் பற்றிக் கேள்விப்பட்ட நாள் முதல், வீட்டுக்குள் முடங்கியே கிடந்தார்.

முகநூல் தான் அவருக்குப் பொழுது போக்காக இருந்தது.

பின்னர் எப்படி இந்த குடும்பத்தின் ‘ஜல்சா’ வீட்டுக்குள் கொரோனா நுழைந்தது?

அபிஷேக்பச்சன், ‘’ BREATH: INTO THE SHADOWS’ என்ற இணையதள சினிமாவில் நடித்து வந்தார்.

(அவரது முதல் வெப் சினிமா இது)

அந்த சினிமாவுக்கு ’டப்பிங்’ கொடுக்க ’சவுண்ட் விஷன்’ ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார். ஒரு நாள் முழுவதும் அந்த ஸ்டூடியோவில் கழித்துள்ளார்.

அன்றைய தினம் ஸ்டூடியோவுக்கு வெளியே சில புகைப்படக்காரர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

அங்கிருந்து தான், அபிஷேக், கொரோனாவை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

அபிஷேக் குடும்பத்துக்கு கொரோனா உறுதியானது தெரிய வந்ததும், அந்த ஸ்டூடியோவை மூடி விட்டார்கள்.

இதனிடையே படுக்கையில் இருக்கும் அமிதாப்பச்சன் குறித்து, நேரம் –காலம் தெரியாமல் சில நெட்டிசன்கள் விமர்சிப்பது அவரது ரசிகர்களைக் கோபம் அடையச்செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஓமியோபதியே சிறந்த மருத்துவம் என்று அமிதாப்பச்சன், வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.

இப்போது அமிதாப், அலோபதி மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது வலைத்தள கருத்தை, விஷமிகள் சிலர் கிண்டலடித்து வருகிறார்கள்.

-பா.பாரதி.