சென்னை

Aமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர்  அபிராமி ராமநாதன் இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

ஜி எஸ் டி வரிவிதிப்பில் திரைப்பட டிக்கட்டுக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் கேளிக்கை வரி சட்ட திருத்த மசோதா, உள்ளாட்சி வரி 30% விதித்துள்ளது.   மொத்தம் 58% வரி மிகவும் அதிகம் எனக்கூறி நாளை முதல் திரையரங்குகள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தன.   இதற்கு சில இயக்குனர்களும்,  தயாரிப்பாளர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இது பற்றி இன்று அபிராமி ராமநாதன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அபிராமி ராமநாதன் பேசினார்

அவர் கூறியதாவது :

நாங்கள் இரட்டை வரிவிதிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர ஜிஎஸ்டிக்கு எதிரிகள் அல்ல,  மொத்தம் 58% வரி கட்டிவிட்டு எங்களால் தொழில் நடத்த முடியாது.  அதனால் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 1000 திரையரங்கங்களும்  மூடப்படும்.   கோரிக்கை நிறைவேறும் வரை காட்சிகள் நடைபெறாது.” என கூறினார்

கூட்டத்தில்  திரைப்பட வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.