திரைக்கு வராமல் 460 தமிழ் படங்கள் உள்ளது : ஆர்.வி.உதயகுமார்

அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தண்டகன்’

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது. விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் தமிழ் சினிமாவில் 460 படங்கள் திரைக்கு வராமலேயே இருப்பதாகவும், இதனால் கோடிக்கணக்கில் பணம் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார் .

மேலும் முன்னணி நட்சத்திரங்கள் திரை துறையை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் .

You may have missed