800  விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு

டில்லி

டந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு அமலாக்கப்பட்டது.  அதற்கு ஓரிரு நாட்கள் முன்பிருந்தே விமானப் பயண சேவை ரத்து செய்யப்பட்டது.   அதன்பிறகு மேலும் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பயணத் தடை தொடர்ந்தது.  அதன்பிறகு மே மாதம் 25 முதல் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது.

அப்போது மொத்த விமானச் சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயக்கப்பட்டது. அதன்பிறகு அது 45% ஆக அதிகரிக்கப்பட்டது.   பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. முதலில் நாள் ஒன்றுக்கு 20000 பயணிகள் பயணம் செய்த நிலையில் தற்போது 60000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.  ஆயினும் முன்பு தினசரி 3.5 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில் இது மிகவும் குறைவாகும்.

விமான பயணத்துறை அமைச்சக இணைச் செயலர் உஷா பதி, “உள்நாட்டு விமானப்பயண சேவை தொடங்கியதில் இருந்து 27 லட்சம் பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.  இதில் சுமார் 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.  இது 0.8% மட்டுமே என்பதால் மிகவும் குறைவானதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி