புதிதாக 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 5 ஆயிரம் கோடி செலவு…மத்திய அரசு

டில்லி:

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் புதிதாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க ரூ. 5 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற லோக்சபாவில் நிதித்துறை இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ‘‘1,695.7 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் அச்சடிக்கப்பட்டது. இதற்கு 4,968.84 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் 365.4 கோடி, 2 ஆயிரம் ரூபாய் நோட் டுக்கள் 1,293 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

178 கோடி, 200 ரூபாய் நோட்டுக்கள் 522.83 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் புதிதாக 50, 200, 500, 2,000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டது’’ என்று தெரிவித்திருந்தார்.

மற்றொரு பதிலில், ‘‘ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்கான செலவு கணக்கில் இருந்து உபரி தொகையாக அரசுக்கு மாற்றம் செய்வது 2016-17ம் ஆண்டில் 35 ஆயிரத்து 217 கோடியாக குறைந்துள்ளது.

2015-16ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி உபரி தொகையாக 65 ஆயிரத்து 876 கோடியை அரசுக்கு மாற்றம் செய்தது. 2016-17ம் ஆண்டில் இது 30 ஆயிரத்து கோடியை மாற்றம் செய்துள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

You may have missed