ஹரித்துவார்,

உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் உள்ளது.இந்தமாநிலத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் பாஜக 56 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தபடி, பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருப்பதாக அறிகுறிகள் காட்டுகின்றன.

இம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் ஹரீஸ்ராவத் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தோல்வியும் மற்றொன்றில் பின்தங்கியும் உள்ளார்.

இதேபோல் இந்தமாநிலத்தின் நட்சத்திர தொகுதியான சக்ரத்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிதாம் பவார் சுமார் 900 வாக்குகள் முன்னணியில் உள்ளார்.

உத்திரபிரதேசத்தைப் போல் உத்தரகாண்டிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.