துபாயிலிருந்து அபுதாபி செல்ல ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் வரும் 2020 முதல் துபாய் -அபுதாபி பயணம் வெறும் 12 நிமிடங்களில் சாத்தியமாகும் என்று தெரிகிறது. இந்த உலகின் அதிவேக பயணத்துக்கான மல்டி-பில்லியன் டாலர் பெறுமானமுள்ள போக்குவரத்து தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் துபாய் இறங்கியிருக்கிறது.
இந்த திட்டத்துக்கான டீஸர்:
[embedyt] http://www.youtube.com/watch?v=ryRDxACsBCI[/embedyt]
ஒரு குழாயினுள் உள்ள காந்தப்புலத்தினுள் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் மிதந்துசெல்லும் ஒரு வாகனத்தில் பயணம் செய்யப்போகும் அனுபவத்தை விரைவில் வளைகுடாவாசிகள் பெறவிருக்கிறார்கள். இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு பெயர் ஹைப்பர்லூப் டெக்னாலஜி ஆகும்.
இது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்காவை சேர்ந்த ஹைப்பர்லூப்-ஒன் என்ற நிறுவனத்துக்கும் துபாய் அரசுக்கு இடையே கையெழுதாகியுள்ளது.