சென்னை:

ன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதி மன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமாநிலத்தை சேர்ந்த சுபாஷ் காசிநாத் என்பவர், எஸ்சி., எஸ்டிக்கு ஆதரவான வன்கொடுமை சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் விசாரணையை அடுத்து, ‘எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மீது கொடுக்கப்படும் புகாரில், அவர்களை உடனடியாக கைது செய்துவிடக்கூடாது.’டி.எஸ்.பி., தலைமையில், பூர்வாங்க விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே, மேல் அதிகாரி அனுமதியுடன், கைது செய்ய வேண்டும்’ என, தீர்ப்பளித்தது.

உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பு உள்ளது.  இதன் காரணமாக வட மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 10க்கம் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், மத்திய அரசு, தலித் வட்டமைப்பு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.