வன்கொடுமை சட்ட திருத்தம்: பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது

தேனி:

பெரியகுளத்தில் உள்ள  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்.

வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்த போராட்டக்குவினர், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி.க்கள் எந்தவித அழுத்தமும் தரவில்லை என்று கூறி  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது  போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  காவல்துறையினரை   மீறி அவர்கள் வீட்டை முற்றுகையிட ஓடினர்.  இதையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்ட  50-க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.