அகமதாபாத்:

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, குஜராத் பல்கலைக்கழகத்தில் மாணவர் களின் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது ஏபிபிவி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில், குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த  ஏபிவிபி குண்டர்கள், அவர்கள் மீது தாக்குல் நடத்தினார். இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து கூறிய காயம் அடைந்த நபரான நிகில் சவானி, ஏபிவிபியினர் காவல்துறையினர் முன்பு தங்களை கம்பு மற்றும் கட்டைகளால் தாக்கினர் என்றும், காவல்துறையினர்கூட எங்களைத்தான் உதைத்தனர் என்று தெரிவித்து உள்ளனர்.

இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதல் தீவிரமான நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.  காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.