24 டிகிரி செல்சியஸில் ஏ.சி.யை பயன்படுத்துவது கட்டாயம்….மத்திய அரசு திட்டம்

டில்லி:

மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஏ.சி.யை கட்டாயம் 24 டிகிரி செல்சியஸில் மட்டுமே இயக்க வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏசி பயன்பாட்டில் மின்சார சேமிப்பை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய மின் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார தேவை உலகளவில் அதிகரிக்க உள்ளது.

இதை எதிர்கொள்ளும் வகையில் ஏசி எந்திரங்களில் 24 டிகிரி செல்சியஸ் பயன்பாட்டை வலியுறுத்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு 24 டிகிரி செல்சியஸ் பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஏசி எந்திரங்களில் மின்சார சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும். 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலான ஏசி பயன்பாட்டை எந்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுது.

இது தொடர்பான அறிவுரை அறிக்கையை அனைத்து நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏ.சி.யை ஒவ்வொரு டிகிரி உயர்த்தும் போது 6 சதவீத மின்சார பயன்பாடு சேமிக்கப்படுகிறது.

ஜப்பான் போன்ற சில நாடுகளில் ஏசி எந்திரங்கள் 28 டிகிரி செல்சியஸ் பயன்பாடிற்கு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து நுகர்வோரும் இதற்கு ஒத்துழைத்தால் ஆண்டிற்கு 2 ஆயிரம் கோடி யூனிட் மினசாரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.