Random image

’பிக்பாஸ் 2’ செட்டில் ஏசி மெக்கானிக் பலி!

பிக்பாஸ் 2 அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஏசி மெக்கானிக் மரணமடைந்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ் 2” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து நடைபெற்று வருகிறது.

 

 

இங்கு, அரியலூர் மாவட்டம் மத்தூரை சேர்ந்த  குணசேகரன் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.  நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தார்.

நேற்று இரவு இவர் தான் தங்கியுள்ள இரண்டாவது மாடியில் அறையின் இருந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் மரணமடைந்தார்.

இதுகுறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குணசேகரன் நண்பர்களுடன் நேற்று இரவு உணவருந்திக்கொண்டிருந்ததாகவும்  பிறகு கைகழுவும் போது தவறி கீழே விழுந்ததில்  பலியானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.