சென்னை:
மிழகத்தில் கொரோனாவால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஜூன் 15ந்தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதை எதிர்த்து, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான வசந்திதேவி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.44 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களின்  6.38 லட்சம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஊரடங்கால், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாதவர்கள்., எனவே 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

கல்வியாளர் வசந்திதேவி,  தமிழகத்தில் அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.