நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துங்கள்: அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணை பணிகளை விரைவுபடுத்துங்கள் என்று தமிழக அரசை  எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு  நிவாரணப் பணிகளை  விரைவு படுத்த வேண்டும் என்றும்,  டெல்டா மாவட்டங் களில் அரசின் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிருப்தி நிலவுவதாகவும் தெரிவித்தார்.

அந்த பகுதிகளில் உள்ள  பொதுநல சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியின ருடன் அரசு  ஆலோசனை நடத்தி, பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக கூறினார்.

ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளா மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் முகாமிட்டு பணிகளை வேகப்படுத்தி இருக்க வேண்டும், ஆனால் ஹெலிகாப்ட ரில் சென்று கணக்கு எடுத்துவிட்டேன் என கூறுகிறார்/ புயல் நிவாரண நிதியாக திமுக சார்பில் ரூ.1 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்றும், திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக கூறியுள்ளனர் என்றார்.

மேலும்,  மத்திய அரசிடம் நிவாரண நிதியை கேட்டதோடு நின்றுவிடாமல் அதைப் பெறுவதற்கும் தமிழக அரசு தொடர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தியவர்,  புயல் பாதித்த மாவட்டங்களில் திமுக சார்பில் நிவாரணப் பணிகள் தொடரும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.