Random image

சென்னையில் கட்டுமான பணியின்போது விபத்து: 10வது மாடியில் இருந்த விழுந்து 2 பேர் பலி

சென்னை:

சைதாப்பேட்டை பகுதியில்  கட்டுமான பணியின் போது 10வது மாடியில் இருந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 பேரை பலிகொண்ட கட்டிடம்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், பொதுப்பணித்துறை சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டு அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், நேற்று லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர்  10வது மாடியில்  இருந்து தவறி விழுந்து இறந்தனர்

இறந்தவர்கள் பெயர் பிரவீன் மற்றும் கோவிந்தன் என்று தெரிய வந்துள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தின்போது, தொழிலாளர்கள் 2 பேரும் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி பணியாற்றியதாக கூறப்படுகிறது.