கர்நாடகாவில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10பேர் உள்பட 12 பேர் பலி

தர்மசாலா:

ர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்மசாலா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நடைபெற்ற கோர விபத்தில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

கர்நாடக மாநிலத்தின் மிகமுக்கிய ஆன்மீக ஸ்தலமாக திகழ்வது தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயில். மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில் நேத்ராவதி நதிக்கரையில் அமைந்திருக்கிறது தர்மஸ்தலா என்னும் இந்த புண்ணிய கேந்திரம்.

சம்பவத்தன்று இந்த கோவிலுக்கு  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். அப்போது கார்  தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே நிலைதடுமாறிக் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அப்போது இந்த காரை தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியதில் அதிலிருந்த இரண்டு பேரும் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.