மும்பை

மும்பையில் ஒரே பாதையில் இரு மோனோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதி நடக்க இருந்த விபத்து ரெயில் நிறுத்தப்பட்டு தவிக்கப்பட்டது,

மின்சாரத்தடை காரணமாக மும்பை செம்பூர் மோனோ ரெயில் நிலையத்தில் அங்கிருந்து கிளம்ப வேண்டிய ரெயில் ஒன்று பழுதடைந்து நின்று விட்டது.   அதே தடத்தில் வாட்வா ரெயில் நிலையத்தில் இருந்து செம்பூர் ரெயில் நிலையத்துக்கு மற்றொரு மோனோ ரெயில் வந்துக் கொண்டிருந்தது.   மின்சாரம் இல்லாததால் பழுதாகி நின்ற ரெயில் தெரியவில்லை.

ஆனால் பயணிகளில் சிலர் அதை கவனித்து கூச்சலிட,  வந்துக் கொண்டிருந்த ரெயில் நிறுத்தப்பட்டது.   இதனால் நேரவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் ரெயிலிலிருந்து பத்திரமாக மீட்ட்கப்பட்டனர்.

தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு வருவதால் உடனடியாக அந்த வழியில் உள்ள அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.   இன்று மதியத்துக்கு மேல் மீண்டும் மோனோ ரெயில்கள் சேவை துவங்கும் எனத் தெரிகிறது.

இது போல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு முறை மோனோ ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.   ஆனால் ஏற்கனவே பழுதடைந்து ஒரு மோனோ ரெயில் நிற்கும் வழியில் மற்றொரு ரெயிலுக்கு எப்படி செல்ல அனுமதி கிடைத்தது எப்படி என்பது இதுவரை மர்மமாக உள்ளது.

சென்னையிலும் விரைவில் மோனோ ரெயில் விடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது