எச்சரிக்கை: சாலையில்  எண்ணெய் படலம்:   வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள், காயம்

சென்னை:

சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டி . ஆறாக ஓடிய து.  இந்த எண்ணெய் படலத்தால் வாகன ஓட்டிகள் பலர் சறுக்கி விழுந்தனர். காயம்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுந்து காயம் பட்ட ஒருவர்

பேசின் பிரிட்ஜ் பாலத்தில் வந்து கொண்டிருந்த லாரியிலிருந்து திடீரென எண்ணெய் சாலையில் கொட்டியதில், சாலையில் எண்ணெய் ஓடியது. இந்த பகுதியில் வந்த வாகனங்கள் பிரேக் பிடிக்க முடியாமல் சறுக்கின. குறிப்பாக இரு சக்ரவாகனங்கள் சறுக்கி விழுந்தன. இதனால் இரு சக்கரவாகன ஓட்டிகள் பலர் காயம் அடைந்தனர்.

மேலும் இந்த எண்ணெய் படலம் புரசைவாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், கிண்டி, செல்லும் சாலைகளிலும் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த வருட விபத்து..

சென்னையில் பல்வேறு இடங்களில் எண்ணெய்படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்தனர். இவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்லுமாறு மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் அடையாறு பகுதியில் எண்ணெய் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளாகி சாலையில் எண்ணெய் வழிந்தோடியது. தற்போது  போலவே அப்போதும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்தனர். அப்போது எண்ணெய் பரவிய பகுதியில் மணலைக் கொட்டி எண்ணைய் பசை போக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.