நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை:

மோசமான சாலைகளாலேயே ஏற்படும் விபத்துக்கு நெடுசாலை துறையே இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது,

இதுகுறித்த வழக்கு ஒன்று டிவிசன் பென்ஞ் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர். ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மோசாமான சாலைகளாலேயே விபத்து நடப்பது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற விபத்துகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையே பொறுப்பேற்க வேண்டும். மேலும், மோசமான சாலையால் நிகழும் விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான இழப்பீட்டையும் நெடுஞ்சாலை துறையே கொடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தனர்.

இதுமட்டுமின்றி நீதிபதிகள், மதுரவாயல்-வாலாஜா சாலை வளைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 4-ல் நடந்து வரும் பரமாரிப்பு பணிகளை கண்காணிக்க வழக்கறிஞர்-கமிஷரை நியமிக்கவும் உத்தரவிட்டனர்.

இதுமட்டுமின்றி, இந்த நீதிபதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த பகுதியில் டிராபிக் சிக்னல்கள் மற்றும் ரெஸ்ட்ரூம்கள் முறையாக உள்ளதாக என்பதையும் நெடுஞ்சாலை ரோந்து பணிகளில் மோசமான செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் உத்தரவிட்டனர்.  இதற்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினர் ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை வளைவில் உள்ள 17 இணைப்பு சாலைகளில் சுங்க சாவடி அமைக்க வேண்டுமென அறிக்கை சமர்பித்தனர்.

ஏற்கனவே, உதவி வழக்குரைஞர்-ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கரைபேட்டை இடையே ஆறு லேன்களுடன் கூடிய 38 கிலோ மீட்டர் வளைவு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கட்டி முடிக்கப்பட்டது. இருந்தபோதும், காண்டிராக்டர் தெரிவித்த படி, ஜனவரி 31-ம் தேதிக்குள் 15.47 சதவிகித பணிகளை முடிக்கவில்லை. அதற்கு பதிலாக 2.4 சதவிகித பணிகளை மட்டுமே முடித்திருந்தனர் என்று கூறியிருந்தார். இதையடுத்து பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், காண்டிராக்டர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. மேலும் கெடுவுக்குள் 31.95 சதவிகித பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.