தற்காலிக ஓட்டுனர்களால் தொடரும் விபத்துக்கள் :  மக்கள் பீதி

சென்னை

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நான்காம் நாளாக இன்று வேலை நிறுத்தம் நடத்தி வருகின்றனர்.   உயர்நீதிமன்றம் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது.   ஆனால் ஊழியர்கள் உத்தரவை புறக்கணித்துள்ளனர்.    அரசு பேருந்துகள் பெருமளவில் இயங்காததால் மக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இதையொட்டி போக்குவரத்து கழகங்கள் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறது.    சென்னை மாநகர பேருந்து ஒன்று ஆவடி பணிமனையில் சுற்றுச் சுவர் மீது மோதியது.    அதே போல விருத்தாசலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மோதி 37 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.   மேலும் பேருந்து மோதியதில் ஒரு சிறுமியும் ஒரு வாலிபரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.   அவர்களை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக வைத்துள்ளனர்.   இதைத் தொடர்ந்து மக்களிடையே தற்காலிக ஓட்டுனர்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக ஒரு பயம் எழுந்துள்ளது.   மேலும் பேருந்துகள் அதிகம் ஓடாததால் ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளன.   இதனால் அரசு உடனடியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்ட்ம் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Accidents due to temporary drivers
-=-