ண்டன்

ண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தாக்குதல் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை சுமார் 74.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சுமார் 4.19 லட்சம் பேர்  உயிர் இழந்துள்ளனர்    இந்த வரிசையில் அமெரிக்கா அதிக அளவிலும் அதற்கு அடுத்தபடியாக பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உள்ளன.

இங்கிலாந்தில் நடந்து வரும் ஒரு ஆய்வில் முதல் கட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறிப்பிட்ட இரத்த வகையில் அதிகமாகவும் வேறு சில வகையில் குறைவாகவும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  இதில் இதுவரை 7.5 லட்சம் பேருடைய பரிசோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு முதல் கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு இன்னும் நடந்து வருவதால் இது குறித்த முழு முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை,  இதன்படி இரத்த வகைகளான ஏ பி ஓ ஆகியவற்றுக்கு கொரோனா தாக்கம் மாறுபட்டுக் காணப்படுகிறது   குறிப்பாக ஓ பிரிவு இரத்த வகையினருக்கு மற்ற பிரிவினரை விட 9 முதல் 18% வரை கொரோனா தாக்குதல் குறைவாக இருந்துள்ளது.  இந்த முடிவு வயது, பாலினம், இருப்பிடத்தைப் பொறுத்து மாறுகின்றன.

குறிப்பாக சீனாவில் நடந்த சோதனைகளை ஆய்வு செய்ததில் ஓ பிரிவு இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு மற்ற பிரிவு இரத்த வகையை விடக் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் மரபணு மாறுபாட்டைப் பொறுத்தும் வாய்ப்புக்கள் மாறுதல் ஏற்படுகின்றன.  இந்த ஆய்வில் அனைத்து வகை இரத்தப் பிரிவு முடிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   இந்த ஆய்வு மேலும் நடைபெற உள்ளதால் இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வு  நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.