மும்பை: பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வயது சிறுமியிடம் கேட்கப்பட்ட 87 கேள்விகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஃபிரெஞ்சு நாட்டவர் விடுதலை செய்யப்பட்டார்.

மும்பை அந்தேரி பள்ளியில் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அறங்காவலராக இருக்கிறார். அப்பள்ளியில் பயிலும் ஒரு இளம் சிறுமியை, ஒரு ஆசிரியை உதவியுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, பல மாதங்கள் சிறைதண்டனை அனுபவித்தார் அந்த அறங்காவலர்.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு போக்ஸோ நீதிபதியின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, 87 கேள்விகள் அடங்கிய பட்டியல் அச்சிறுமியிடம் வழங்கப்பட்டு பதில் பெறப்பட்டது.

அவற்றில், மிகப் பெரும்பாலான கேள்விகளுக்கு நுட்பமாக பதிலளித்து ஆச்சர்யப்படுத்திய சிறுமி, குற்ற சம்பவம் தொடர்பாக மட்டும் தெளிவான பதில்களைக் கூறாமல், இல்லை என்ற தொனியிலேயே பதில்களைக் கூறியிருக்கிறாள்.

எனவே, இதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட அந்த ஃபிரான்ஸ் நாட்டவர் விடுதலை செய்யப்பட்டார்.

– மதுரை மாயாண்டி