துப்பாக்கியுடன் இருக்கும் படத்தை முகநூலில் வெளியிட்ட  கொள்ளையன் நாதுராம்!


ஜெய்ப்பூர் :

சென்னை மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்படும் வரும் ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறான்.

கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி ராஜஸ்தான் சென்றது சென்னையை சேர்ந்த தனிப்படை காவல் அணி. அப்போது டிசம்பர் 12ம் தேதி அதிகாலையில் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை காவல் அணி சுற்றி வளைத்தனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டியல் சக காவல் அதிகாரி தவறுதலாக சுட்டதில் பெரியபாண்டி மரணடைந்தார்.

கொள்ளையன் நாதுராம் அங்கிருந்து தப்பிவிட்டான்.அவனை ஒரு மாதமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளான். கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் அந்த புகைப்படத்தில், தன்னை யாரும் பிடிக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.