இந்திய மாநிலங்களில் காணப்படும் வெவ்வேறு கோவிட் -19 இறப்பு விகிதத்திற்கு காரணம் ஜீன் மியூட்டேசன்: ஆய்வு முடிவுகள்

இந்தியர்களிடையே காணப்படும் மியூட்டேசன் விகித மாறுபாடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய கொள்கை சம்ந்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு சர்வதேச குழு, செல்களின் மேற்பரப்பில் உள்ள புரோட்டீன் – ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம் 2 (ACE2) தோற்றத்திற்கு காரணமான ஜீனில் தோன்றும் மியூட்டேசன்களை ஆய்வு செய்தது. இது கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் நுழைய நுழைவாயில் போன்றது எனக் கருதப்படுகிறது.  ACE2  புரோட்டீன் X குரோமோசோமில் அமைந்துள்ள ஜீன் மூலம் தோன்றுவதை பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே திறம்பட நிரூபித்துள்ளன.

ஃபிரான்டியர்ஸ் இன் ஜெனெடிக்ஸ் இதழில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் இந்த மியூட்டேசன் உருவாகும் வேகம் மற்றும் எண்ணிக்கையின்  பல்வேறு வேறுபாடுகள்  விவரிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவில், இந்த ஹாப்லோடைப்பின் வேகம் அல்லது மியூட்டேசன்களின் கலவையானது வெவ்வேறு பிராந்தியங்களில் 33 இல் இருந்து -100 சதவீத அளவிற்கு வேறுபடுகின்றன என்பதை அவற்றின் இடஞ்சார்ந்த பகுப்பாய்வு காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள், முதன்முறையாக, இந்திய மக்களிடையே குறைந்த தொற்று மற்றும் தோற்று-இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) ஆகியவற்றுடன் மியூட்டேசனுக்கும்  குறிப்பிடத்தக்க நேரடி தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். BHU – விலங்கியல் துறையின் பேராசிரியர் ஞானேஷ்வர் சௌபே கூறுகையில், அடையாளம் காணப்பட்ட மாறுபாடுகள் கொரோனா வைரஸ் நாவலுக்கு எதிராக ஒரு நபரின் பாதிப்பைக் குறைக்கின்றன என்றார்.  “ஒரு பிராந்தியத்தில் இந்த ஹாப்லோடைப் உள்ளவர்கள் அதிகமாக இருந்தால், வைரஸின் தொற்று குறைவாக இருக்கும்” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய சௌபே PTI-யிடம் தெரிவித்தார்.

“ஆச்சரியப்படும் விதமாக, இந்த ஹாப்லோடைப்பின்பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான விநியோகம் தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றுடன் மிகவும் தொடர்புடையது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று சௌபே கூறினார். “இந்த ஜீன் காரணியின் மியூட்டேசன் வேகம் அதிகமாக இருந்த இடத்தில், தொற்று மற்றும் இறப்பு விகிதம்  குறைவாகவும் நேர்மாறாகவும் இருந்தன,” என்று அவர் குறிப்பிட்டார். தரவு குவிந்து வருகின்ற போதிலும், பல்வேறு உலக மக்களிடையே நோயாளியை பாதிக்கும் ACE2 ஜீன் மாறுபாட்டின் வெளிப்பாடு இன்னும் அறியப்படவில்லை. “மரபணு ரீதியாக, பெரும்பாலான தெற்காசியர்கள் கிழக்கு யூரேசியர்களுடன் ஒப்பிடுவதை விட மேற்கு யூரேசிய மக்களுடன் அதிகம் தொடர்புடையவர்கள், அதேசமயம் இந்த ஜீன் மியூட்டேசன் முடிவு மேற்கத்திய மற்றும் யூரோப்பிய நாடுகளின் அதிகரித்த நோய் தொற்று மற்றும் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது  முடிவு அவர்களுடன் ஒப்பிடும்போது முரண்பாடாக இருக்கிறது” என்று முந்தைய ஆய்வின் இணை ஆசிரியரான சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜார்ஜ் வான் ட்ரைம் மேலும் தெரிவித்தார்.