இந்திய தேர்தல் கமிஷனுக்கு புதிய ஆணையர்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் உட்பட  மூவர் உள்ளனர். இதில் தலைமை தேர்தல் ஆணையராக டாக்டர் நசீம் சைதி உள்ளார். மற்ற இரு இடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையராக குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் ஆச்சல் குமார் ஜோதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சட்டத்துறை வெளியிட்டுள்ளது. இவர் மூன்று  வருடங்கள் பதவி வகிப்பார்.