தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்றார்

--

டில்லி,

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பொறுப்பேற்றார். அவருக்கு தேர்தல் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போதைய தேர்தல் ஆணையர்  நசீம் ஜைதியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அச்சல்குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதையடுத்து அச்சரல்குமார் இன்று காலை 11 மணி அளவில் புதிய தேர்தல் கமிஷனராக பதவியேற்றார்.

இவர் ஏற்கனவே மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநில தலைமைச் செயலாளராக பதவி வகித்தவர்.  குஜராத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும் பணிபுரிந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான அச்சல் குமார் ஜோதி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் 21-வது தலைமை ஆணையராக இன்று பதவியேற்றார்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்றுள்ள அச்சல்குமாருக்கு சக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.