அச்சமில்லை அச்சமில்லை பட டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன்…!

முத்து கோபால் இயக்கத்தில் அமீர், சாந்தினி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை.

இப்படத்தில் இயக்குனர் அமீர் அரசியல் பிரமுகராக நடித்து வருகிறார். விவசாயிகளின் பிரச்னை, மணல் கொள்ளை, டாஸ்மாக் என பல பிரச்னைகளைமையமாக எடுக்கப்பட்டுள்ளது இப்படம் .

இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.