ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018: கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்பு

ஜகர்தா:

ந்தோனேசியால் நடைபெற்று  ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள இரட்டையர் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அசாந்தா ஷரத் கமல் மற்றும் பட்ரா மானிகா கலப்பு இணை அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இணை காலிறுதி போட்டியில் தங்களை எதிர்த்து போட்டியிட்ட எதிர் அணியினரை : 4-11, 12-10, 6-11, 11-6, 11-8 செட் கணக்கில் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதிப்போட்டியில் சீனா அணியினரை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணி  இதுவரை 9 தங்கம், 10 வெள்ளி, 22 வெண்கலம் உள்பட 50 பதக்கங்களை பெற்றுள்ளது.