அச்சம் என்பது மடமையடா பத்திரிக்கையாளர் சந்திப்பும் – சிம்புவின் விளக்கமும்

simbu

கிட்டத்தட்ட 2 வருட போராட்டத்திற்கு நாளை விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது அஎம டீம். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் வழக்கம்போல சிம்பு ஆப்செண்ட். பத்திரிக்கையாளர்களும் வழக்கம்போல சிம்பு ஏன் வரலை என்கிற கேள்வியை எடுத்து கௌதமை நோக்கி வீசினர். இதற்கு கௌதம் மேனன் சொன்ன பதில்தான் சிம்புவை மீண்டும் சிக்கலில் சிக்க வைத்துவிட்டது.

“நேற்று முன் தினம் சிம்பு தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர்களை அழைத்து லீலா பேலஸ் ஹோட்டலில் பேசினார். இதனால் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வர வேண்டிய அவசியமில்லையே என்று கௌதம் கூறிவிட்டார். வாய் தவறியோ இல்லை மனதில் இருந்த வெறுப்பு காரணமாகவோ இந்த பதிலை கௌதம் கூறிவிட்டாலும் சிக்கல், விக்கலும் என்னவோ சிம்புவுக்குதான்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏன் வரவில்லை என்பதை சிம்பு தரப்பு தற்போது கூறியுள்ளது. “வைரஸ் காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருக்கும் காரணத்தாலேயே பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்தேன், அடுத்த முறை கண்டிப்பாக உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்று கூறியுள்ளார் சிம்பு”.