ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் கசிவு: அகற்றும் பணி தொடங்கியது

 

தூத்துக்குடி:

க்கள் போராட்டம் காரணமாக சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்து வைக்கப் பட்டிருந்த கந்த அமிலம் கசிவு ஏற்பட்டதை தெடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து  கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. உதவி ஆட்சியர் பிரசாந் தலைமையிலான குழுவினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  ஆலைக்கு சென்று ஆய்வு செய்து அமிலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமிலக் கிடங்கில் இருந்து கந்தக அமிலம் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ஆலையில் உள்ள கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாகவும் ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று துணை ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைமையில், கந்த அமிலத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.