போதை பொருள் பயன்படுத்தியது தெரியமலிருக்க நடிகை ராகினி நூதனம்..

கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதி கடந்த 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் நடிகை ராகினி சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். நடிகை ராகினி திவேதி சிறுநீர் சேம்ப்பளில் பரிசோ தனை மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதில் அவர் தண்ணீரை கலந்து மருந்து கொடுத்து நூதனமாக ஏமாற்ற முயன்றது தெரிந்தது.
போதைப்பொருளைப் பயன்படுத்து வதை சிறுநீர் பரிசோதனையில் கண்டறிய முடியும் என்பதால் அதில் கண்டறிய முடியாதபடி சிறுநீரில் தண்ணீரைச் சேர்த்து அதன் வெப்ப நிலையை குறைக்கும் செயலில் ஈடுபட் டாராம். அது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரிடம் மீண்டும் சிறுநீர் மாதிரியை பெற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.