ரபேல் குறித்து கேள்வி கேட்பவர்களுக்கு மோடியின் எச்சரிக்கை : ராகுல் காந்தி

டில்லி

சிபிஐ விவகாரத்தில் மோடியின் நடவடிக்கைகள் ரபேல் ஒப்பந்தம் குறித்து கேள்வி கேட்கபவர்களுக்கு விடும் எச்சரிக்கை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே கடும் மோத்ல் நிலவி வருகிறது. சிபிஐ இயக்குனர் தனது விசாரணை நடவடிக்கைகளில் தேவை இல்லாமல் தலையிடுவதாக அஸ்தானா ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ராகேஷ் அஸ்தானா ஒரு தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. நேற்று மத்திய் ஆரசு அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் விடுப்பில் செல உத்தரவிட்டுளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்ட்ர் பக்கத்தில், “ரபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா சேகரிக்க தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்காக அரசு அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பி உள்ளது. ரபேல் ஊழல் தொடர்பாக யார் கேள்வி எழுப்புபவர்களுக்கு மோடி விடுக்கும் எச்சரிக்கை இது.” என பதிந்துள்ளார்.