மோடி பயண திட்டத்தை வெளியிட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை

சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடந்தது. பிரதமர் மோடி இக்கண்காட்சியை திறந்து வைத்தார். அப்போது மோடியின் பயண திட்டம் வாட்ஸ் அப்பில் கசிந்தது. இதனால் பிரதமருக்கு எதிராக பலர் துல்லியமான வழித்தடத்தில் நின்று கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

பயண திட்டம் கசிவு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தி.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.