கொரோனா பரவல் தடுப்பு – தமிழக அரசின் நடவடிக்கைகள் விபரம்!

சென்னை: கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை மொத்தமாக 2,09,035 பயணிகள், மாநிலத்தின் விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

12,519 பயணிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

89 பேர் மருத்துவமனைகளில் தனிப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

552 இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், 503 மாதிரிகளில் பாதிப்பில்லை என்றும், 9 மாதிரிகளில் நோய் தொற்றுள்ளது என்றும் முடிவுகள் வெளிவந்துள்ளதோடு, 40 மாதிரிகள் இன்னும் பரிசோதனையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.