சென்னை

ட்டப்பேரவை உரிமைக் குழுக்கூட்டம் குட்கா பற்றிய விவாதத்தில் ஜுலை 19ல் நடந்த நிகழ்வைக் குறித்து திமுக உறுப்பினர்கள் மீது விசாரணை கூட்டம் வரும் 28ஆம் தேதி நடத்த உள்ளது.

கடந்த ஃபிப்ரவரி 18ல் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரிய போது தி மு க சட்டமன்ற உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சட்டப்பேரவை உரிமைக்குழு விசாரணை நடத்தியது.  ஏழு திமுக உறுப்பினர்களை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என விசாரணையின் இறுதியில் கூறியது.   இருப்பினும் சபாநாயகர் அந்த திமுக உறுப்பினர்கள் மன்னிப்பு கோரியதால் சஸ்பெண்ட் தேவையில்லை என கூறினார்/

கடந்த ஜூலை மாதம் 19ல் குட்கா பற்றிய விவாதத்தில் மு க ஸ்டாலின் குட்கா பாக்க்கெட்டை சட்டசபையில் காட்டி, தமிழ்நாட்டில் இன்னும் குட்கா விற்பனை நடந்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.    இதில் ஏற்பட்ட அமளியில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.   இது குறித்து விசாரணை செய்ய வரும் 28ஆம் தேதி அன்று சட்டசபை உரிமைக்குழு கூட உள்ளது.

இது தங்களின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் கூட்டப்படும் கூட்டம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இம்முறை திமுக உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தினகரன் அணி எம் எல் ஏக்கள்,  எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை  இழந்து விட்டதாகவும்,  திமுக – காங்கிரஸ் எம் எல் ஏ க்கள் இந்த அரசு நம்பிக்கை வாக்கு சட்டசபையில் கோர வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதும் தெரிந்ததே.