பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை! கமிஷனர்

சென்னை:,

பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிட தீவிபத்து காரணமாக அருகிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டதாக வும், 50 மீட்டருக்குள்ளான கடைகள் ஒருசில நாளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு காவல் சேவையை எளிதாக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பயனாக பொதுமக்களின் புகார்களை பெறுவதற்காக காவல் ஆய்வாளர்கள், அனைத்து காவல் நிலையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இருப்பார்கள்  என்று கூறினார்.

மேலும், ஆய்வாளர்கள்  தினமும் காலை 11 முதல் 12.30 மணி வரையும், இரவு 8 முதல் 9 மணி வரையும் காவல் ஆய்வாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும்,

சென்னையில் போக்குவரத்து நெரிசல் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறினார்.

கடந்த வாரம் சென்ன ராதாகிருஷ்ணன் சாலையில் நடைபெற்ற பைஸ் ரேஸ் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.