கோஹிமா: நாகலாந்து அரசு, அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களூடாக விமர்சிக்கும் மற்றும் பத்திரிகையாளர் கூட்டங்களில் கருத்துத் தெரிவிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது.

இது கடந்த வாரத்தில் நாகா மக்களுடன் உரையாடலுக்குப் பொறுப்பேற்றுள்ள கே.என். ரவி, அக்டோபர் 31இல் அமைதிப் பேச்சு முடிவடையும் என்றும் நாகாவினருக்கு தனிக்கொடியோ, தன்னாட்சியோ இருக்கப் போவதில்லையென்றும் தெரிவித்திருந்ததன் தொடர்ச்சியாகவே உள்ளது.

ரவி, மேலும் நாகலாந்து பொதுவுடைமை பேரவை (இஸாக்-முவியா) மீது, கடந்த ஆகஸ்ட் 3, 2015 இல், பல்லாண்டுகளாக நிலவி வரும் நாகாக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு வரைவு ஒப்பந்தம் அரசின் சார்பாக கையெழுத்தாகியிருந்தும் அதனைத் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் “துப்பாக்கியின் நிழலில் தொடர்ந்து கோரிக்கை வைப்பது ஏற்கத் தக்கதல்ல“, என்றார்.

கடந்த திங்களன்று, நாகலாந்தின் மேற்கண்ட அரசாணையை வெளியிட்ட முதன்மைச் செயலாளர், “தற்போது சில அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் விமர்சித்துத் தங்களது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் சமூக ஊடகங்கள், பத்திரிகையாளர் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் வெளிப்படுத்துவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது“, என்றார்.

இந்த அரசாணை கூறுவது என்னவெனில், இது, நாகலாந்து அரசு ஊழியர்கள் நடத்தை“ க்கான சட்டம் 22 இன் மீறல் எனக் , கூறப்படுகிறது. “ஆகவே, அனைத்து அரசு ஊழியர்களும், சட்டத்தை மீறும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது“ எனவும், “அவ்வாறு சட்ட மீறல் செய்பவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்“, என்பதே ஆகும். இதற்கிடையில், விடுமுறையிலிருந்த காவல்துறை அதிகாரிகள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவி கூறியிருப்பதாவது, “பரஸ்பரம் ஒத்துக்கொண்ட வரைவு, உண்மையான பிரச்சினைகள் மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டதோடு“, தேவாலய ஆசிகளும் பெற்ற ஒன்றாக, இதற்காகக் கையொப்பத்திற்குத் தயாராயுள்ளத, என்று கூறினார்.

கடந்த செவ்வாயன்று, நாகா மக்களுக்கு நாகாலிம் தேவாலயங்களின் பேரவை விடுத்த அழைப்பு இதுதான்; “நாகா மக்களின் அடையாளம், வரலாறு, அரசியல் உரிமை காக்கப்படுவதற்காக கடவுளிடம் பிரார்த்திப்போம்“.

இகாடோ சிஷி சுவு என்ற பெயரில் கையெழுத்திடப்பட்ட அக்கடிதத்தில் மேலும், “இந்தியத் தலைவர்கள், நாகாலிம்மிற்குக் கடவுள் தந்த அரசதிகாரம் மற்றும் கொடியினை அடையாளம் கண்டு, மதித்திட ஆண்டவனைப் பிரார்த்திப்போம்“, என்றும், “அக்டோபர் 24 அன்று நடைபெறும் பூர்வாங்க பேச்சுவார்த்தையில் சாதகமான விளைவுக்காக மக்கள் காத்திருக்க வேண்டும்“, என்றும் கூறப்பட்டுள்ளது.