ஜாகர்தா

ந்தோனேசிய அமைச்சர் முகமது மக்பூத் மனைவியரையும் கொரோனாவை ஒப்பிட்டுப் பேசியதால் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை விட அது குறித்து வரும் மீம் மற்றும் நகைச்சுவை துணுக்குகள் வேகமாகப் பரவி வருகின்றன.  உலக அளவில் இது அதிகரித்து வருகிறது.  இந்த நகைச்சுவை ஓரளவுக்கு இருக்கும் போது ரசிக்கப்படுகிறது.  ஆனால் அதுவே அதிகமானால் கண்டனத்துக்கு உள்ளாகிறது

அவ்வகையில் இந்தோனேசிய அமைச்சர் முகமது மெகபூப்  சமூக வலைத் தளத்தில், “எனக்கு ஒரு மீம் வந்தது.  அதில்,’கொரோனா மனைவி போன்றது.  நாம் முதலில் கட்டுப்படுத்த முயற்சி செய்வோம்.  ஆனால் அது முடியாது என உணரந்து  அதனுடன் வாழ பழகி விடுவோம்’ என குறிப்பிடப்பட்டிருந்து எனப் பகிர்ந்தார்.

அவர் இதை நகைச்சுவை என நினைத்துப் பதிய ஆனால் விளைவு நேர் மாறாகியது.  சமூக வலைத்தள போராளிகளும் பெண் உரிமை அமைப்புக்களும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன   பலரும் ஆட்சியாளர்கள் பொறுப்பற்று இருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய பெண்கள் ஒற்றுமை அமைப்பு, “இந்தோனேசிய அரசுக்கு கொரோனா தொற்றை  ஒழிப்பதில் பொறுப்பறற தன்மை உள்ளது,  ஆட்சியாளர்கள் ஆணாதிக்க மற்றும் பெண் விரோத கருத்துக்களைக் கொண்டுள்ளதை இது தெளிவு படுத்தி உள்ளது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.