அரசியல் யுத்தம் அறியா அப்பாவி ராணுவத்தினர் : ஆர்வலர்கள் கண்டனம்

டில்லி

தேர்தல் பிரசாரத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து ராணுவத்தினர் புகைப்படங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது திவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி இந்திய விமானபடை அந்த இயக்க முகாம் மீது பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாக் விமானப் படை இந்திய எல்லையை தாண்டி வந்த போது விரட்டி சென்ற விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார்.

விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபடுவதற்கு முன்பு பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை வீழ்த்தி உள்ளார். உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தனை ப் பாகிஸ்தான் விடுதலை செய்தது. அதில் இருந்து இந்திய மக்களின் கதாநாயகனாக அபிநந்தன் ஆகி விட்டார். அவருடைய புகைப்படத்துடன் மோடியின் படத்தை சேர்ந்த்து தேர்தல் பான்ர்களை பாஜக அமைத்தது.

அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தங்கள் கட்சி பானர்களில் அபிநந்தன் புகைப்படத்தை வைத்துக் கொண்டது. இதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தும் இன்னும் இந்த சுவரொட்டிகள் தொடர்கின்றன. அனுமதி அளிக்கப்பட்டோ அல்லது அனுமதி இன்றியோ அரசியல் கட்சியினர் ராணுவத்தினரை தங்கள் தேர்தல் பிரசாரத்துக்குள் இழுத்துள்ளன்ர்.

இவ்வாறு தேர்தல் பிரசாரத்தில் ராணுவ நடவடிக்கைகள் பயன்படுத்துவதற்கு பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள், “தெரிந்தோ தெரியாமலோ ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள் அரசியல் வாதிகளால் பயன்படுத்தப் படுகிறது. இது ராணுவத்தினரின் திறமையை மட்டும் இன்றி புகழையும் கெடுப்பதாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாட்டில் அரசியலமைப்பு விதிகள் மீறப்படுவது தவறாகும்.

நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த மற்றும் கொடுக்க தயாராக உள்ள வீரர்களை தங்கள் வாக்குப்பெட்டியை நிறப்ப அரசியல் வாதிகள் பயன்படுத்துகின்றனர். தற்போது ஆட்சி செய்யும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானை எதிர்த்து போரிடுவது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அது அவர்களின் கடமை தானே தவிர சாதனை இல்லை.

நமது முப்படை வீரர்கள் எதிரியை நேருக்கு நேர் நின்று போரில் வெல்வதை நன்கு தெரிந்துக் கொண்டுள்ளனர். ஆனால் அரசியல் வாதிகளின் பிரசார வியூகத்தில் அவர்களையும் அறியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர். அரசியல் வாதிகளின் அரசியல் யுத்தம் பற்றி அறியாமல் இந்த அப்பாவி ராணுவத்தினர் உள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.