டில்லி

கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கு இடையில் 12 முதல் 16 வாரங்கள் தேவை என நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்கிறது.  இந்த மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ளது.  இந்தியாவில் போடபடும் இரு கொரோனா தடுப்பூசிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆரம்பத்தில் இந்த தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டு 4-6 வாரங்களுக்கு பிறகு இரண்டாம் டோச் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  அதன் பிறகு நிபுணர்களால் அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.   நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவின்படி இரு டோஸ்களுக்கு இடையே 6-8 வாரங்கள் என மாற்றப்பட்டது.

இன்று நிபுணர்கள் வெளியிட்டுள்ள கருத்தின்படி இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதாவது தற்போது கோவிஷீல்ட் மருந்து இரு டோஸ்களுக்கான இடைவெளி 12- 16 வாரங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என ஆர்வலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.