Random image

சென்ற வாரம் தொடங்கிய பெருங்கடல் சுத்திகரிப்பு : ஆர்வலர்கள் மகிழ்வு

கிரீஸ்

லகில் உள்ள பெருங்கடல்களை சுத்திகரிக்கும் பணி  தொடங்கி உள்ளஹ்டால் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெதர்லாந்தை சேர்ந்த இளைஞர் போயன் ஸ்லாட் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு கிரீஸ் பதியில் உள்ள கடலில் நீந்திக் கொண்டிருந்தார்.   அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   கடலில் மீன்கள் நிறைந்திருக்கும் என சொல்வார்கள்.   ஆனால் மீன்களை விட பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் மிதப்பதை ஸ்லாட் கண்டார்.

 

கடந்த 2013 ஆம் வருடம் ஸ்லாட் தனது 18 ஆம் வயதில் பெருங்கடல்கள் சுத்திகரிப்பு இயக்கம் என ஒன்றை தொடங்கினார்.   அவர் இந்த இயக்கத்தை பசிஃபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹாவாய் மற்றும் கலிஃபோர்னியா இடையிலான கடல் பகுதியில் தொடங்க விரும்பினார்.   இந்த பகுதியில் சுமார் 80 ஆயிரம் டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   இது 500 ஜம்போ ஜெட் விமானங்களின் எடைக்கு சமாமாகும்.

அத்துடன் கடலில் உள்ள மொத்த பிளாஸ்டிக் துகள்களை கணக்கெடுத்தால் அது உலக மக்கள் தொகையைப் போல 250 மடங்கு இருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.  இந்த மாதம் 5 ஆம் தேதி ஸ்லாட் தலைமையிலான குழு இந்தப் பகுதியில் தனது சுத்திகரிப்பு பணியை தொடங்க உள்ளது.  இந்தக் குழு கடலின் நீர்ப்பரப்பு ஆழத்தை  மூன்றாக பிரித்து முதல் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

தற்போது சுமார் 24 வயதாகும் ஸ்லாட்டின் முயற்சிக்கு ஆர்வலர்கள் பலர் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.