அட்ச ரேகை தீர்த்த ரேகை என்று எந்த ரேகை கணிப்புக்கும் ரைட்ல இண்டிகேட்டர் போட்டு லெப்ட்ல போக்கு காட்டிவிட்டு உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை இரையாக்கிய கொரோனா வைரஸை தங்களது விஞ்ஞான முயற்சிமூலம் கட்டுக்குள் உட்கார செய்திருக்கிறது சீனா.

மற்றொருபுறம், கட்டுக்குள் வந்திருக்கும் இந்த கொரோனா வைரஸை விரட்ட தேவையான அனைத்து மருத்துவ முயற்சிகளிலும் சில நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. இப்படி பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் என்ன தெரியுமா :

சீனா

சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை.

சீனாவில் இயங்கி வந்த கடைசி மருத்துவமனை மூடப்பட்டது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனைக்கு புதிதாக எந்த நோயாளிகளும் வராததால், அனைத்து கொரோனா வைரஸ் மருத்துவமனைகளும் மூடப்பட்டது.

103 வயதான சீனப் பாட்டி வுஹானில் 6 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் கோவிட்19 லிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார்.

சீனாவில் மூடப்பட்ட தனது 42 மொபைல் ஷோரூம்களையும் மீண்டும் திறந்தது ஆப்பிள் மொபைல் நிறுவனம், எஸ்.பி.யு.எக்ஸ். வணிக நிறுவனம் தனது 4290 சீன கடைகளில் 85% சதவீத கடைகளை மீண்டும் திறக்கிறது.

சீனா தனது டாக்டர்களையும் டன் கணக்கிலான மருத்துவ உபகரணங்களையும் தற்போது இத்தாலிக்கு அனுப்பி வருகிறது.

நெதர்லாந்து :

நெதர்லாந்தின் ஈராஸ்மஸ் மருத்துவ மையத்தின் டச்சு விஞ்ஞானிகள் கோவிட்-19 க்கு எதிராக மருந்து கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர்.

அமெரிக்கா :

அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள், அது சில மணிநேரங்களிலேயே குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.

சான் டியாகோ பயோடெக் நிறுவனம் டியூக் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட் 19 தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.

தென் கொரியா

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இஸ்ரேல்

இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது

உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றம் மக்களின் பாராட்டுகளையும் கைத்தட்டலையும் பெற்றிருக்கிறது.