தந்தைக்கு வீட்டிலேயே முகச்சவரம் செய்த நடிகர் ஆதி….!

--

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக சலூன் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக மீண்டும் வரும் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் நடிகர் ஆதி, தனது தந்தைக்கு வீட்டிலேயே முகச்சவரம் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.