Random image

கருணாநிதி மறைவு: நடிகர்கள் அஜித்குமார், தனுஷ் இரங்கல்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார், நடிகர் தனுஷ் உள்பட ஏராளமான திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி சிகிச்சை பலனின்றி  நேற்று  மாலை 6.10 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார்,  முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக தலைவர் கருணாநிதி சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  ‘வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்’ என்று கூறியிருக்கிறார்.