தக்‌ஷா அணி வெற்றிசான்றிதழுடன் நடிகர் அஜித்

சர்வதேச அளவிலான ஆளில்லா விமாத்தை வடிவமைக்கும் போட்டியில் தகஷா அணி 2வது இடத்தை பிடித்ததை தொடர்ந்து, அந்த அணியின் வெற்றி சான்றிதழுடன் அஜித் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

ajith

சர்வதேச அளவில் ஆளில்லா விமானத்தை வடிவமைத்து இயக்கும் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்கும் சென்னை எம்.ஐ.டி.யின் தக்‌ஷா அணிக்கு அஜித் ஆலோசகராக இருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் இறுதிச் சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் அஜித்தின் தக்‌ஷா அணி 2-வது இடம் பிடித்திருந்தது. இந்தக் குழுவுக்கு உறுதுணையாக இருந்த நடிகர் அஜித்துக்கு அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தக்‌ஷா அணி வெற்றிச் சான்றிதழுடன் அஜித் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலகி வருகிறது.

நடிகர் அஜித், ரேஸ் கார் இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் என்பது மட்டுமே ஊரறிந்த விஷயமாக இருந்த நிலையில் அண்மையில்தான் அவர் ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்தது.