பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொல்லும் விதமாக புதிய தோற்றத்துடன் வந்த நடிகர் அஜித்துடன், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தையும் ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், முற்றிலும் மாறுபட்ட அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதில் அஜித் மிகவும் இளமையாக தோற்றத்தில் தெரிவதால், அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியுடன் படங்களையும், அது தொடர்பான வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

கிளீன் ஷேவ், குறிப்பாக மீண்டும் பிளேக் ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் அஜித். விமான நிலையத்தில், ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க முண்டியடிக்க, அவரே மொபைலை வாங்கி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.